2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

பேருந்தில் மோதி குடும்பப் பெண் மரணம்

Janu   / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரிகம பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தொன்றில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (31) அன்று இடம்பெற்றுள்ளது. 

அலவ்வ , மேல் புத்கமுவ பிரதேசத்தைச்​ சேர்ந்த 65 வயதுடைய சுமனாவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வியாழக்கிழமை (31) காலை தனது மகளுடன் ரேந்தபொல விகாரைக்கு வந்து வழிபாடுகளில் ஈடுபட்டு மீண்டும் அலவ்வ நோக்கி பயணிப்பதற்காக பேருந்தில் ஏறியுள்ளனர். இதற்கிடையில் அவரது மகள் பேருந்தில் இருந்து இறங்கி பணப் பரிமாற்ற இயந்திரத்திற்கு (ATM) சென்றுள்ளார்.

இந்நிலையில் பேருந்து புறப்பட தயாரானதால் குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி தனது மகளை வரவழைத்து அவளுடன் பேருந்தில் ஏற வந்துள்ளார். இதன்போது மகள் முதலில் பேருந்தில் ஏறியுள்ளதுடன் அதே நேரத்தில், நீர் கொழும்பிலிருந்து வந்த மற்றொரு பேருந்து 65 வயதுடைய பெண் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X