2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்துக்கு அங்கிகாரம்

Editorial   / 2025 நவம்பர் 18 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்தை ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய அரசுப் பேரவையின் 1971 ஆம் ஆண்டு எண் 1 பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18)  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

இதுவரை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் திரும்பப் பெறப்படாது என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்​ போது அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X