Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய தினம் வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புபவர்கள் ஜனவரி மாதம் 16ஆம் திகதிக்கு முன்னர் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பாடசாலை விண்ணப்பத்தாரிகள் மீளாய்வு விண்ணப்பத்தினை பாடசாலை அதிபர் ஊடாகவும் தனியார் பரீட்சார்த்திகள் எதிர்வரும் நாள்களில் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் அறிவித்தலுக்கமையவோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தில் வெளியிடப்படும் அறிவித்தலுக்கமையவோ விண்ணப்பங்களை அனுப்ப முடியுமென ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 3,21,469 பரீட்சார்த்திகளுள் 1,67,907 பேருக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்களென்றும் 119 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago