Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பற்றாக்குறையின்றி தற்போது உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண, விவசாயத் திணைக்களம், இராணுவம் இணைந்து, உரத்தை விநியோகித்து வருவதாகத் தெரிவித்தார்.
தேவையானளவு உரம் இலங்கைக்குக் கிடைத்துள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக அதனை வெளி மாகாணங்களுக்கு அனுப்ப முடியாமல் இருப்பதாகவும் விரைவில் அந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.
“2019இல் உரம் கொண்டு வருவதற்காக செலுத்தப்பட வேண்டிய நிதி செலுத்தப்படாமையால், உர இறக்குமதியில் மட்டுப்பாடு காணப்பட்டது. எனினும், இந்த அரசாங்கத்தின் விசேட கொள்கை மூலம் செலுத்தப்பட வேண்டிய நிதி செலுத்தப்பட்டுள்ளதால், உர இறக்குமதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“அதேபோல், கடந்த காலங்களில் இலங்கையில் 20 பில்லியன் ரூபாய் செலவில் தோடம்பழம், அப்பிள், திராட்சை என்பன இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், பெரிய வெங்காய இறக்குமதியால் 12 பில்லியன் ரூபாயும் சின்ன வெங்காயம் இறக்குமதியால் 3 பில்லியன் ரூபாய், வௌ்ளைப்பூண்டு இறக்குமதியால் 2 பில்லியன் ரூபாயும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளது” என்றார்.
“அதனால் தான், அத்தியாவசியப் பொருள்களை மாத்திரம் இறக்குமதி செய்யத் தீர்மானித்தோம். இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்துப் பழவகைகள், மரக்கறிகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று, அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago