2021 மே 15, சனிக்கிழமை

பல்கலைக்கழக உப வேந்தர்களுடன் இன்று கலந்துரையாடல்

J.A. George   / 2021 மார்ச் 02 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் அலரி மாளிகையில் இன்று(02) மாலை 05 மணிக்கு நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,  பல்கலைக்கழகங்களுக்கான ஒதுக்கீடுகள் போதாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கட்டடங்களும் போதுமானதாக இல்லை எனவும் இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை மேலதிகமாக 10,600 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .