2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பலத்த பாதுகாப்புடன் சடலம் கொண்டுவரப்பட்டது

Janu   / 2023 நவம்பர் 21 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், குறித்த இளைஞனின் சடலமானது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸார் 785 வழித்தட வீதியை முற்றாக வீதித்தடை மூலம் மூடி பயணிகளின் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு விளைவித்தனர். இதனால் பயணிகள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி மிகவும் கடினத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

​ஐந்து பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமையில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் வீதியால் செல்பவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரை கேவலமாக திட்டி விட்டு, எச்சில் உமிழ்ந்து விட்டு செல்வதை அங்கு அவதானிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பு. கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X