2021 ஜூன் 16, புதன்கிழமை

‘போலித் தகவல்களை நம்ப வேண்டாம்’

Editorial   / 2020 ஜூலை 15 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று தொடர்பில் போலியானத் தகவல்களை பரப்புவோர் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில தரப்பினரால், இவ்வாறான போலித் தகவல்கள் சமூகத்தில் பரப்பப்படுகின்றமைக் குறித்து, கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவமால் இருப்பதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .