2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

Freelancer   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தங்களுக்கு அருகாமையில் உள்ள பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பெறலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்ட குழுக்களால் தடுப்பூசி வழங்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை இயல்பாக்குவதை துரிதப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி போடப்படாத அனைத்து மாணவர்களும் தடுப்பூசி பெற அருகில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு வருமாறும் அவர் அழைப்புவிடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X