2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக மாணவர் அனுமதியை அதிகரிக்கத் தீர்மானம்

Gavitha   / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டுக்காகப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்;ணிக்கையை, 10 சதவீதத்தால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 3ஆம் திகதி வெளியான பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து, பரீட்சார்த்திகளால் கோரப்படும் மீள்திருத்த முடிவுகளுக்காக தமது அலுவலகம் காத்திருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா, நேற்று செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிநுட்பப் பிரிவிலும் பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், தொழிநுட்பம் சார்ந்த 28 பட்டப்படிப்புக் கற்கை நெறிகளை நாடளாவிய ரீதியிலுள்ள 12 பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ருஹூணு, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்கள், தொழிநுட்பம் சார்ந்த கற்கை நெறிகளுக்காக தனியான பீடத்தை அமைப்பதற்கு தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதுடன், கொழும்பு பல்கலைக்கழகம் இவ்வகையான பீடத்தை பின்னாளில் அமைக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இது போன்ற பீடங்களை ஏனைய பல்கலைக்கழகங்களிலும் அமைப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊக்கமளிக்கும் எனவும் தெரிவித்தார்.

ஆண்டுதோறும், நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களில் 25,000 மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X