Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மார்ச் 03 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - வட்டக்கச்சி, ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில், தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில், அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எட்டு வயது, ஐந்து வயது, இரண்டு வயது உடைய ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண்களையும் இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறியமுடிகின்றது.
குறித்த சிறுவர்கள் அணிந்து சென்ற பாதணிகள் மற்றும் தொப்பி என்பன கிணற்றுக்கு அருகில் காணப்படுகின்றன.
கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்ற போதிலும், மீட்கப்பட்ட பெண் பதில் ஏதும் கூற மறுப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago