Janu / 2026 பெப்ரவரி 02 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிளாஸ்டிக் குழாய் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த துப்பாக்கியின் இலக்கம் தெளிவற்ற நிலையில் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஜி. சாணக்கவின் வழிகாட்டுதலின் கீழ், பொலிஸ் பரிசோதகர் அறாகமவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, உஸ்வெட்டகெய்யாவ - பமுனுகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு குறித்த துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது மற்றும் இது ஏதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா அல்லது மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூலித் தொழிலில் ஈடுபடும் 24 வயதுடைய சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
31 minute ago
48 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
48 minute ago
56 minute ago