2025 மே 15, வியாழக்கிழமை

பஸ்ஸை எரித்த உரிமையாளர்

Simrith   / 2023 ஜூலை 06 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று கடந்த  ஜூன் 30ஆம் திகதி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமான நிகழ்வு, பேருந்திற்கான முப்பது மில்லியன் ரூபா காப்புறுதித் தொகையை பெற்றுக்கொள்ள அதன் உரிமையாளர் மேற்கொண்ட திட்டம் என  தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை.

இருப்பினும் குறித்த பேருந்து முற்று முழுதாக எரிந்து விட்டது.

பொலிஸார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பேருந்துக்கான 30 மில்லியன் ரூபாய் காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேருந்தின் உரிமையாளரே அதை எரித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முந்தைய செய்தி ; https://shorturl.at/hivy4


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .