2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பஸ் கட்டணங்கள் ​குறித்து நாளை தீர்மானம்

Editorial   / 2018 டிசெம்பர் 02 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ் கட்டணங்கள் திருத்தம் குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்படுமென, அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னரே இது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மீண்டுமொரு முறை டீசலின் விலையை 5 ரூபாயால் அரசாங்கம் குறைத்துள்ள நிலையில், அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன சம்மேளனம் பஸ் கட்டணங்கள் திருத்தம் குறித்து கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .