2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பஸ் கட்டணங்கள் 4.2 சதவீதத்தால் குறையும்

Editorial   / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஸ் கட்டணங்களை 4.2 சதவீதத்தால் குறைக்க, பஸ் சங்கங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இருதரப்புக்கிடையில், இன்று (24) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

டீசல்  விலை குறைக்கப்பட்டுள்ளதற்கமைய இவ்வாறு பஸ் கட்டணங்களில் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாதெனவும், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

 பஸ் கட்டண குறைப்பு, எதிர்வரும் 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படுமென, அமைச்சு  தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .