2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பஸ் மோதி ஐந்து பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 16 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுகம பஸ் நிலையத்தில் காத்திருந்த பெண் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானாதில் அந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (15) பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இனிதும, போதிகந்த பகுதியை சேர்ந்த  பிரியங்கா பிரியதர்ஷினி என்ற 40 வயதுடைய, ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர், உடுகம டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸொன்றில் கடமைபுரியும் நடத்துனரின் மனைவி என தெரிவிக்கப்படுகின்றது.

தனது பிள்ளையை மேலதிக வகுப்பில் விட்டுவிட்டு வீடு திரும்பிய போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், உடுகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தையடுத்து, பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், உடுகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .