2025 ஜூலை 02, புதன்கிழமை

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

Freelancer   / 2025 ஜூலை 01 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூடி இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்  நவோமி ஜெயவர்தன தெரிவித்தார்.

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை முதல் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் இன்று (01) அது செயல்படுத்தப்படாது என்று நவோமி ஜெயவர்தன  மேலும் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .