2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

பாண் விலையை 10 ரூபாயால் குறைக்க இணக்கம்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான ஒன்றிணைந்த தீர்வை வரிகள் நீக்கப்பட்ட நிலையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை 70 ரூபாய்க்கு வெதுப்பகங்களுக்கு வழங்கினால் பாண் இறாத்தலொன்றின் விலையை 10 ரூபாயால் குறைக்க முடியும் என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா நிறுவனங்களினால் தற்போது  ஒரு கிலோகிராம் கோதுமை மா 90 ரூபாயக்கு வழங்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட வரி குறைப்பினை அடுத்து, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாயால் குறைக்கப்படும் என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .