Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 செப்டெம்பர் 05 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாயாக அதிகரிப்பதா, இல்லையா? என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வர்த்தக அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தமது உற்பத்திப் பொருட்களுக்கான தேவை ஏற்கெனவே 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, பேக்கரி பொருட்களின் விலையை மேலும் உயர்த்தினால், தொழில்துறை வீழ்ச்சியடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தையில் கோதுமை மாவின் தட்டுப்பாடு மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாயாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த சனிக்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago