2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை’

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொல்பொருள் கட்டளைத் திருத்த சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள இடங்களுக்கு, பாதிப்பை அல்லது இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொல்​பொருள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் ஆலோசனையின் படியே, இந்த சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த நாள்களில் புத்தர் சிலைக்கு, ​சேதம் விளைத்தவர்களென அடையாளங்காணப்பட்ட சந்தேகநபர்கள் 11 பேரை, மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தியதாகவும் மேலும் திணைக்களத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .