2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாராளுமன்ற பொலிஸார் குழுவுக்கு கொரோனா

Freelancer   / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2 ஆம் திகதி முதல் தற்போது வரை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் பத்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பெரும்பாலானோருக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பாராளுமன்றத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு,   பொலிஸ் தலைமை அதிகாரிகள் குழுவை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விடுமுறையில் செல்லும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் விரைவான ஆன்டிஜென் சோதனைகளை நடத்தவும், முடிவுகளின்படி மட்டுமே பாராளுமன்ற வளாகத்தில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் பொலிஸ் தலைமையகம் கூறுகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X