2021 மே 17, திங்கட்கிழமை

பிஞ்சு குழந்தைக்கு பிரம்படி: பெண் கைது

Editorial   / 2021 மார்ச் 02 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தையின் மீது கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்திய பெண் கைதுசெய்யப்பட்டார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பிரம்பினால், அந்த குழந்தையை கண்மூடித்தனமாக அந்தப் பெண் அடிக்கும் வீடியோ காட்சிகள் அடங்கிய ஒளிநாடா சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்தே, மேற்படி பெண்ணை, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவ​ரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .