Freelancer / 2025 செப்டெம்பர் 27 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவித்த போது உயிரிழந்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சோமசுந்தரம் வீதி ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி (வயது 28) என்ற இளம் தாயாவார்.
கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்படி கற்பவதியான தாய்க்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மூலம் இரு சிசுக்கள் பிரசவிக்கப்பட்ட போது ஒரு சிசு இறந்தும் மற்றைய சிசு சில மணி நேரத்திலும் இறந்துள்ளது.
மயக்கமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (26) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
பிரேத பரிசோதனையில் இறப்பிற்கான காரணம் கண்டறிய உடற்கூற்று பாகங்கள் இரசாயண பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (a)
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago