2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பிரபல ரெப் இசை பாடகர் துப்பாக்கியுடன் கைது

Freelancer   / 2025 மார்ச் 14 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷான் புத்தா எனப்படும் இலங்கையின் பிரபல ரெப் இசை பாடகர், மீகொடை அரலிய உயன பகுதியில் வைத்து 9 மில்லி மீட்டர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவருக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் குறித்த பாடகரின் முகாமையாளரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் மாத்தறை, கொட்டவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது இந்த துப்பாக்கி திருடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .