2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

‘பிரபாகரனை சந்திக்கவிருந்தேன்’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திப்பதற்கு, கிளிநொச்சிக்கேனும் செல்வதற்கு தயாராகவிருந்தேன் எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்கும் அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, இந்திய எஸ்என்ஐ செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியி​லேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“நான், தூது சொல்வோரே அனுப்பினேன். பிரபாகரன், கொழும்புக்கு வருவதற்கு விரும்பவில்லையாயின். நான் அங்கு வருவதாக கூறியிருந்தேன். நான், கிளிநொச்சிக்கு சென்று, அவரை சந்திப்பதற்கு இருந்தேன். என்றாலும், அவர் ஒருபோது அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை” என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

“அதேபோல, விடுதலைப் புலிகள் அமைப்பை, யுத்தரீதியில் தோல்வியடைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை தனக்கிருந்தது. எனினும், மேற்குலக நாடுகளும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரும், அதன் மீது நம்பிக்கைகொள்வில்லை” என்றும் தெரிவித்துள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .