Janu / 2026 மே 06 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், பெரியபாடு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 618 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான 'தம்பபண்ணி' கடற்படை கப்பல் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (05) பெரியபாடு கடலோர பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர். இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கெப் (Cab) வண்டியொன்றை சோதனையிட்டபோது, கடத்த முயன்ற பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
20 பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 618 கிலோகிராம் பீடி இலைகள், குறித்த வாகனத்துடன் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேக நபர்கள் 27 மற்றும் 46 வயதுடைய புத்தளம், கொட்டந்தீவு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கெப் வண்டி ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.



1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago