2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பீடி விலை அதிகரிப்பு

Editorial   / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீடியின் விலை அதிகரிக்கப்படும் நாளை (10) முதல் அதிகரிக்கப்படும் என்று  அகில இலங்கை பீடி உற்பத்தியாளர்கள், பீடி இலை மற்றும் புகையிலை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பால், இரண்டு அங்குல பீடியின் சில்லறை விலை ரூ.15 ஆகவும், சிவப்பு நூல் கொண்ட இரண்டு அங்குல பீடி ரூ.13 ஆகவும் அதிகரிக்கும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு அங்குல பீடியின் விலை முன்பு ரூ.10 ஆகவும், சிவப்பு நூல் கொண்ட இரண்டு அங்குல பீடியின் விலை ரூ.9.50 ஆகவும் இருந்தது என்று சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் பீடியின் மீதான வரியை ரூ.2 லிருந்து ரூ.3 ஆக உயர்த்தியுள்ளதாகவும், பிற செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது,

பீடித் தொழிலின் முக்கிய மூலப்பொருளான 'தெண்டுகோலா' அல்லது பீடி இலைகளை நாட்டிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதைத் தடுக்க அதிகாரிகள் தவறியதால் பீடித் தொழில் மேலும் நிச்சயமற்றதாகிவிட்டது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய விலையில் பீடி விற்கப்படவில்லை என்றால், இதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

பீடி இலைகள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கை​களை தவிர்க்க தலையிடுமாறும் அகில இலங்கை பீடி உற்பத்தியாளர்கள் சங்கம்  அரசாங்கத்திடம் கோரியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X