2025 ஜூலை 05, சனிக்கிழமை

புகைப்படமெடுத்த இளைஞர்கள் இருவருக்கு விளக்கமறியல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில், வழிபாட்டு இடத்திலுள்ள தாதுகோபுரத்தின் மீதேறி, புகைப்படமெடுத்த இளைஞர்கள் இருவரையும், இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல் கைதுசெய்யப்பட்ட, மூதூரைச் சேர்ந்த ரஷின் மொஹமட் ஜவ்ரி (வயது 20), ஜலால்தீன் ரப்தி அஹமட் (வயது 18) ஆகிய இருவருமேன, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரையும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில், மிஹிந்தலை பொலிஸார், இன்று (15) ஆஜர்படுத்திய போதே, ​விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் இருவரும், நிட்டம்புவ பகுதியிலுள்ள அரபிக் கல்லூரியொன்றில் கல்வி பயின்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .