2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிதாக 8 இலட்சம் பேருக்கு சமுர்த்தி

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் வறுமைக்  கோட்டின் கீழ் உள்ள, 8 இலட்சம் ​பேருக்கு, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிதாக சமுர்த்தி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் சமுர்த்தி பயனாளிகளாக 1,385,516 ​பேர் இருப்பதாக, அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

குறித்த பயனாளிகளில், 5 இலட்சம் பேருக்கு ஒரு வருட காலப்பகுதியில் தனியாக வாழ்க்கை நடத்தக்கூடிய வலுவூட்டல் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .