2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய வாகனங்கள் கொள்வனவு செய்ய தடை

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு தடைவிதிக்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரச நிறுவனங்களில் ஏற்படும் செலவுகளை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏதாவது அமைச்சுகளுக்கு வாகனங்கள் அத்தியாவசியமாக தேவைப்படுமாக இருந்தால்  ஜனாதிபதி செயலகத்தில் காணப்படும் மேலதிக வாகனங்களில் இருந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .