2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை

ரஸீன் ரஸ்மின்   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக  தடை விதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலஹகோன்  நேற்று   (06) தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக, கலாஓயா பெருக்கெடுத்துள்ளதால் புத்தளம் -எலுவன்குளம் பாலத்துக்கு மேலாக இரண்டு அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதாகவும் அவர் ௯றினார்.

இதனால் புத்தளம் - மன்னார் வீதி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து போக்குவரத்துக்களும் புத்தளம் எலுவன்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் - மன்னார் பாதையூடாக பயணிப்போர் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அவர் ​வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை காலி மாவட்டத்தில் நேற்று முன்தினத்திலிருந்து (6) பெய்து வரும் கடும் மழைக் காரணமாக, மாபலகம- எஹலகந்த வீதியின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால்,போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது.

இவ்வாறு மண்சரிவுக்குள்ளான பகுதிகளை நேற்று காலை பிரதேசவாசிகள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்தமைக் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .