2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புலிகளுக்கு நிதி உதவி வழங்கியது யார்?

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

1989, 1990 ஆம் ஆண்டுகளில் நிதி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய, ஆர்.பாஸ்கரலிங்கம், தமிழீழ விடுதலை புலிகளுக்கு, மக்களின்
வரிப்பணத்​தை நிதியாக வழங்கியுள்ளதாக மைத்திரி – மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, ஆர்.பாஸ்கரலிங்கம், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆர்.பாஸ்கரலிங்கம் நிதி உதவி வழங்கினார் எனத் தெரிவித்த பந்துல குணவர்தன, அதற்கான ஆதாரங்கள் எனக்கூறி மூன்று பற்றுச்சீட்டுக்களை இதன்போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கினார்.

தனித்தனியே 09.08.1989, 27.10.1989, 21.03.1990 எனத் திகதி குறிப்பிடப்படப்பட்ட குறித்த மூன்று பற்றுச்சீட்டுக்களிலும்.  நிதியை பெற்றுகொண்டவர் என ஆர்.பாஸ்கரலிங்கத்தின் பெயரே குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பற்றுச்சீட்டுக்களில் எந்தவொரு இடத்திலும், தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆர்.பாஸ்கரலிங்கம் நிதியை வழங்கியதற்கான ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .