Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
மாவீரர் தினத்தன்று, வடக்கில் புலிகளை நினைவுகூர வேண்டாம் எனத் தெரிவித்த இராணு ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, உறவுகளை நிறைவுகூரத் தடையில்லை எனவும் தெரிவித்தார்.
வடக்கில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில், இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்த கருத்துகள் தொடர்பில், மேலதிக விளக்கத்தைப் பெறும்பொருட்டு, அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே, தமிழ் மிரருக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "யுத்தகாலத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர, வடக்கு வாழ். தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. ஆனால், மாவீரர் தினம் என்ற பேரில் புலிகளை நினைவுகூருவதை அனுமதிக்க முடியாது என்பதே இராணுவத்தின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.
"குறிப்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறான அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூருவதை அனுமதிக்க முடியாது" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago