Editorial / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் மற்றும் பணத்தை தேடிய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.
காணியை பரிசோதிக்கும் ஸ்கேனரைப் பயன்படுத்தி அகழ்வுகளை மேற்கொள்ளத் தயாராக இருந்த நபர் ஒருவர் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அத்துடன் ஸ்கேனர் இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், மேலும் அந்தந்த சந்தேக நபர்களுக்கு சொந்தமான கையடக்க தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 54 வயதுடைய ஓமந்த பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Mar 2026
12 Mar 2026