Janu / 2026 ஜனவரி 08 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, தங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் சிறையறை கதவின் பூட்டை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்தால் , தங்காலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர், மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை, பல்லி குடாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (05) அன்று 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago