2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘பெருந்தோட்ட நிறுவனங்கள் இலாபத்தை மறைக்கின்றன’

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட நிறுவனங்களால் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயை வழங்க முடியுமென, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மக்கள் கோரும் 1000 ரூபாயை கண்டிப்பாக நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் மக்களுக்கு 1000 ரூபாயைத் தருமளவுக்கு இலாபத்தைப் பெறுகின்றனர். ஆனால் அந்த இலாபத்தை மறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் மக்களுக்கு 1000 ரூபாயைத் தரமுடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறும் அவர் நிறுவனங்களிடம் சவால் விடுத்துள்ளார்.

எமது அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் பக்கமேயுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .