Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை கணினியில் உள்ளீடு செய்யும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை கணினியில் உள்ளீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
3 குழுக்களினால் இந்த பெறுபேறுகள் மீள பரிசோதிக்கும் பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதுடன் இந்த பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
பெறுபேறுகளை மீள பரிசோதிக்கும் பணிகள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கு அமைவாக பெறுபேறுகள் விரைவில் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
2019 ஆம்ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தர பரீட்சை கடந்த ஒகட்ஸ் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையில் நடைபெற்றது.
2678 மத்திய நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.
இதேவேளை, கலவிப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் இன்று (26) ஆரம்பமாகவுள்ளது.
நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர்.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம திகதி நிறைவடையவுள்ளது.
அதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago