Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (08), பெலியத்த நகரில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம், ஒன்றிணைந்த எதிரணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெலியத்த பிரதேசசபை முன்பாக சுமார் 15 நிமிடம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், பெலியத்த சுற்றுவட்டம் ஊடாக பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்ததன் பின்னர், ஆர்ப்பாட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்தனர்.
குறித்த சதித்திட்டம் தொடர்பில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டீ சில்வாவை கைது செய்யுமாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago