Freelancer / 2025 நவம்பர் 19 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ள உள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் தற்போது திடீரென தாமும் கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .