Janu / 2026 மார்ச் 23 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயண கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக, அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் திங்கட்கிழமை (23) அன்று பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
பேருந்து கட்டணங்களை உயர்த்தக் கோரி அநேகமான தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளன. இதனால் குறுகிய மற்றும் நீண்ட தூர சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மக்களின் நலன் கருதி சில பேருந்துகள் மாத்திரம் ஆங்காங்கே சேவையில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக, அம்பாறையில் இருந்து கொழும்பு, கண்டி, அனுராதபுரம் மற்றும் கேகாலை உள்ளிட்ட அனைத்து தூர இடங்களுக்கான சேவைகளும், ஏனைய குறுகிய தூர போக்குவரத்துச் சேவைகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், அம்பாறையில் இருந்து மாத்தறை நோக்கி ஒரு தனியார் பேருந்து புறப்படுவதற்கு தயாராகியுள்ளது. இதன்போது அங்கு நின்ற ஏனைய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் குறித்த பேருந்தை வழிமறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்காமல் பேருந்தை இயக்க முற்பட்டதாக கூறி, மாத்தறை பேருந்தின் சாரதியை தாக்க முற்பட்டதால் அந்த இடத்தில் அமைதியற்ற சூழல் உருவானது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையிலான பொலிஸார், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமை சுமுகமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பேருந்து தரப்பினர் தமது பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்


1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago