2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பேஸ்புக் விருந்துபசாரம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவு

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக்  ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில், தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சகல பொலிஸ் நிலைய அதிபர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான விருந்துபசாரங்கள் போதை வர்த்தகர்களின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், இவர்களால் முன்னெடுக்கப்படும் விருந்துபசாரங்களில் விஷ போதைப்பொருள்கள் விநியோகிக்கப்படுவதால் பொலிஸ் மா அதிபர் இவைத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

 எனவே பேஸ்புக் மூலம் இவ்வாறான விருந்துபசாரங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றமைத் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்குமாறும் இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை ஹிங்குராகொட பிரதேசத்தில் கடந்த 3ஆம் திகதி பேஸ்புக் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டிருந்த 89 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களுள் 6 பெண்களும் அடங்குகின்றனர்.

குறித்த விருந்துபசாரத்தில் ஹெரோய்ன், கஞ்சா, கேரளா  கஞ்சா, அஸீஸ், உள்ளிட்ட ​போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .