Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணப் பொருளாதாரம், மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதெனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், பிரதானமாக விவசாயத்துறை இங்கு பாரிய பின்னடைவைச் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது,“கிழக்கு மாகாணத்தில் விவசாயத்துறை பின்னடைவைச் சந்தித்து வருகின்றமைக்கு, பொலன்னறுவை நிர்வாகம் ஒரு காரணமாக இருக்கிறது. இதனைத் தொடர அனுமதிக்க முடியாது. இதற்கான மாற்று நடவடிக்கையை நாம் நிச்சயம் முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
மேலும், “நாம், மாகாணசபை அதிகாரத்தில் இருந்தபோது மேற்கொண்ட பொருளாதார மேம்பாட்டு பணிகள்தான், இப்போதும் நீடிக்கின்றன. புதிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் எதனையும், இதுகால வரையில் அரசாங்கம், கிழக்கில் முன்னேடுக்கவில்லை என்பதே, சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்" என்று அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago