Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறுதிமொழிக்கமைய, நாட்டை செயற்படும் நாடாக மாற்றியமைப்பதற்கு முன்னின்று, பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு இலகுவான வரிமுறையொன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
குருநாகலில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும்போது, நாட்டை செயற்படும் நாடாக மாற்றியமைப்பதாக உறுதிமொழி வழங்கினார். அதற்காக நாம் முன்னின்று செயற்படுகிறோம். வரிகளை குறைத்துள்ளோம். வரிகளை குறைத்த பின்னர் வருமானத்தை எப்படி ஈட்டுகிறீர்கள் என வினவுகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரச வருமானத்தை நூறு சதவீதத்தால் அதிகரித்தாக குறிப்பிட்டார்கள். அதாவது, ரணில் விக்கிரமசிங்கவின் பையிலிருந்து பணத்தை இடுவதைப் போல் காட்டிக்கொண்டார்கள் என்றார்.
அதுமட்டுமல்லாது, மத்திய வங்கியில் மக்களுக்குச் சொந்தமான பணத்தை கொள்ளையிட்டனர். அதனை, இந்நாட்டு மக்களே மீள செலுத்த நேரிட்டது. அதன் காரணமாகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதல் பத்து தினங்களுக்குள் இலகுவான வரிமுறையொன்றை அறிமுகஞ் செய்தார்.
நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஆறு மாதங்களுக்கு முன்னரே உரிய தீர்மானங்களை ஜனாதிபதி மேற்கொண்டார். பௌத்த பிக்கு, மகா சங்கரத்தினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில், கடந்த தேர்தலில் அவர்களே எமக்கு மாபெரும் பக்கபலாமாக இருந்தார்கள் எனத் தெரிவித்தார்.
அத்துடன், இந்த அரசாங்கம் ஒரு போதும், மகா சங்கரத்தினருக்கு எதிராகச் செயற்படாது. நாம் எம்முடைய கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவோம் என்பதை கூறிக்கொள்கிறேன் என, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
5 hours ago