2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி செயலணி

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளார்.

அரசமைப்பின் 33வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இச்செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியிலல், இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூக சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி பொருளாதார புத்தெழுச்சியை திட்டமிடுதல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பொறுப்புகள் இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன.

'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக கொண்டு புதிய வாயில்களின் ஊடாக இந்நாட்டுக்கே தனித்துவமான பொருளாதார சட்டகமொன்றை அமைப்பதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதற்காக குறித்த நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும்.

சுதேச கைத்தொழிலாளர்கள், தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் மக்கள் மைய பொருளாதாரமொன்றை தாபிப்பதற்கு இணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் செயலணியின் மற்றுமொரு பணியாகும்.

மக்கள் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்காக சுகாதார, கல்வி செயலணிகளின் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து உற்பத்திகளை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இச்செயலணியின் பணியாகும்.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷஇச்செயலணியின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றார். பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர்களான என்டன் பெரேரா மற்றும் டீ.எஸ்.ஜயவீர ஆகியோர் இணை செயலாளர்களாக உள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X