2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

J.A. George   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் சட்டரீதியான கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

போக்குவரத்து பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில், சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் கடமையை செய்ய விடாது தடுக்கின்றமை தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தப்பிச்சென்ற மற்றைய சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .