2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பொலிஸாரை ஏழு நாள்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 மே 21 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல நிபந்தனைகளின் கீழ், ஒருநாள் விடுமுறையில் சென்று மீண்டும் கடமைகளுக்குச் செல்லும் பொலிஸாரை, ஏழு நாள்கள் வரை கடமையில் ஈடுபடுத்த வேண்டாமென, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன, பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை இரத்துச்செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் பல நிபந்தனைகளின் கீழ், பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒருநாள் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறு விடுமுறையில் சென்று, மீண்டும் கடமைகளுக்குத் திரும்பும் அதிகாரிகளை,  இரண்டு நாள்கள் தனியாக தங்க வைக்குமாறு ஆரம்பத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்த போதும், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய பொலிஸாரை ஏழு நாள்கள் கடமையில் ஈடுபடுத்தாமல் இருக்கமாறு, பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X