2021 மே 17, திங்கட்கிழமை

’பொலிஸிலும் சட்டையிலும் கமெராக்களைப் பொருத்தவும்’

Editorial   / 2021 மார்ச் 01 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டக்கல்லூரி மாணவன், பேலியகொட பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்துடன், பொலிஸ் வன்முறைகள் தொடர்பாக அனைவரினதும் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்.பி. பெரேரா, தவறு நடந்தால் குற்றம் சுமத்துவதோ, தவறிழைத்தவர்களைத் தண்டிப்பதையோ விடுத்து, இவ்வாறான பொலிஸ் வன்முறைகள் இனியும் ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியம் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்துரைத்த அவர், இந்தப் பொலிஸ் வன்முறைகளைத் தடுப்பதற்கான இரண்டு முறைமைகளைப் பின்பற்றலாமெனத் தெரிவித்த அவர், சகல பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு கமெரா பொருத்தினால், பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் பிரஜைகளுக்கோ, பிரதிவாதியின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கோ பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அத்துடன், பொலிஸாரும் பொறுப்புடன் செயற்படுவர்.  எவர் மீதும் முன்வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் தடுக்கப்படும் என்றார்.
 
கடமைகளில் ஈடுபடும் பொலிஸாரின் ஆடைகளில், சிறிய கெமராவைப் (பொடிகேம்) பொருத்துவதன் மூலமும் வன்முறைகளைத் தடுக்கலாம் என்பது இரண்டாவது முறையாகும். இது புதிய விடயமல்ல எனத் தெரிவித்த அவர், தமது நாட்டிலுள்ள சகல பிரஜைகளினதும், பொலிஸாரினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அக்கறையுடன் செயற்படும் அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

எனவேஇ உடனடியாக நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு கமெராவைப் பொருத்த வேண்டும் என்பதுடன்,  படிப்படியாக இரண்டாவது நடவடிக்கையை முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும். இதற்காகப் பாரியளவில் செலவு செய்ய வேண்டியதில்லை எனத் தெரிவித்த அவர், இதன் மூலம் சட்டம், நீதியின் பக்கம் கிடைக்கும் பிரதிபலன் மிக முக்கியமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .