Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
 துப்பாக்கியை காட்டி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த, தெபுவன பொலிஸ் நிலைய சார்ஜன்ட் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியை காட்டி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த, தெபுவன பொலிஸ் நிலைய சார்ஜன்ட் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி தெபுவனப் பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் சார்ஜன்டினால் மணல் லொறி ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில், தெபுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் குறித்த மணல் லொறி விடுவிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த சார்ஜன்ட் தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பிரதேசத்தில் பதற்றமான நிலையை ஏற்படுத்தியதால் கைதுசெய்யப்பட்டு, இன்றைய தினம் 50,000 ரூபாய் சரீரப் பிணை இரண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, தெபுவன பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய, விசேட பொலிஸ் குழுவொன்று இன்று குறித்த பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago