2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொலிஸ் ஜீப் பள்ளத்தில் பாய்ந்தது மூவர் காயம்

Editorial   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆனமடுவ பொலிஸார் பயணித்த ஜீப் வண்டி, ​உப்பளவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகி, வடிகான் ஒன்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயமடைந்த நிலையில் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை (25) இடம்பெற்றுள்ளது.

119 அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் ஆடிகம பிர​ததேசத்துக்கு விரைந்துச் சென்று, மீள திரும்பி வரும் போதே, இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துக்கு வழிவிட முற்பட்ட போது, ஜீப் வண்டியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .