Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஷிவானி
பூஜித் ஜயசுந்தரவை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில், அரசாங்கம் இதுவரை எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் பொலிஸ் மா அதிபர் பதவியானது, அரசமைப்புப் பேரவையால் நியமிக்கப்படுவதால், அவரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், அரசமைப்புப் பேரவைக்கே உண்டெனவும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (03) இடம்பெற்றபோது, பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் குறித்தான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் அப்பதவியை இராஜினாமா செய்யாவிட்டால், நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதிக்குமா என்றும் இதற்கு, அரசாங்கம் என்ற ரீதியில், எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு, தொடர்ந்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கான அமைச்சரின் பதில்களும் வருமாறு,
கேள்வி: பொலிஸ் மா அதிபர், பாடசாலை ஒன்றிடமிருந்து காசோலை பெற்ற விவகாரம் தொடர்பில், நிதி அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?
பதில்: ஆம். பொலிஸ் மா அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில், நிதி அமைச்சினால், பிரத்தியேக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணையின் நிறைவில், தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
கேள்வி: பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி கூறினாரென, ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில், ஜனாதிபதி அவ்வாறு கூறினாரா?
பதில்: பொலிஸ் ஆணைக்குழுவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கேள்வி: நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டு வருகின்ற நிலையில், அதனை நிராகரிக்கும் வகையில், ஜனாதிபதியின் கருத்து அமைந்துள்ளதல்லவா?
பதில்: கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிடும்போது, தற்போது அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனை நான் பல தடவைகள் கூறியிருக்கிறேன். குற்றச்செயல்கள் குறைவாகவே பதிவாகியுள்ள போதிலும், நாளாந்தம் பத்திரிகைகள் ஊடாக, குற்றச்செயல்கள் குறித்த பல செய்திகளை அறியக் கிடைக்கிறது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், ஜனாதிபதி கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago