2025 ஜூலை 07, திங்கட்கிழமை

போக்குவரத்துக்கு பொருத்தமற்ற பஸ்களை அகற்ற நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 09 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்துக்கு பொருத்தமற்ற பஸ்களை சேவையிலிருந்து அகற்றுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பழைய பஸ்கள் தொடர்பில் ஆராயுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, அதிகாரிகளுக்கு இதற்கான ஆலோசனை வழங்கியுள்ளார்.

பழுதுபார்த்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய பஸ்களை மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபடுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பதுளை, பசறை – மடுல்சீமை வீதியில் கடந்த 6ஆம் திகதி மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, அனைத்து பஸ்களையும் சோதனைக்குட்படுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்

15 வருடங்களுக்கு மேல் பழமையான சுமார் 1,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .